திருத்தகுநல்லீர்,
மாதவம் செய்த இத்திருநாட்டில் 36000 சிவாலயத்திற்கு மேல் இருந்தன. அவை அனைத்தும் வழிபாடு செய்யாத நிலையிலும், பராமரிக்காத நிலையிலும் இருந்து மண்மேடாக ஆகின.அதனால் மூலவரான சிவலிங்கத்திருமேனி மண்ணில் புதைந்த நிலை உருவானது. நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த விலை மதிப்பற்ற சிவாலயங்களையும் ,சிவலிங்கத்திருமேனியையும் போற்றி,பாதுகாத்து வழிபாடு செய்வதே நமது கடமை.
24/07/2015
நீர்க்குன்றம் - செங்கல்பட்டு -பழையசீவரம் முக்கூடல் வழியே பட்டாசிறுதாமூரிலிருந்து 2கிமீ இவ்வூர் உள்ளது.
தொடர்புக்கு-சிவ.ஞானசேகர் -9585259994.
26/07/2015
கீழ்வெண்பாக்கம் - காஞ்சிபுரம் -அரகோணம் பாதையில் திருமார்பேறு (திருமால்ப்பூர் ) என்ற பாடல் பெற்ற பதி அருகில் 2 கிமீ இவ்வூர் உள்ளது.சுவாமி திருக்காளத்தி அப்பனை போல மிக உயரம் திருக்கோவில் அமைக்க முயற்சி செய்கிறோம்.