திருத்தகுநல்லீர்,
மாதவம் செய்த இத்திருநாட்டில் 36000 சிவாலயத்திற்கு மேல் இருந்தன. அவை அனைத்தும் வழிபாடு செய்யாத நிலையிலும், பராமரிக்காத நிலையிலும் இருந்து மண்மேடாக ஆகின.அதனால் மூலவரான சிவலிங்கத்திருமேனி மண்ணில் புதைந்த நிலை உருவானது. நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த விலை மதிப்பற்ற சிவாலயங்களையும் ,சிவலிங்கத்திருமேனியையும் போற்றி,பாதுகாத்து வழிபாடு செய்வதே நமது கடமை.
106.PATTANSERI
11/01/2015
பட்டன்சேரி- உத்திரமேரூரிலிருந்து - எண்டத்தூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .ஊருக்குள் சென்று கிணற்று அருகில் இரண்டு சிவலிங்கத்திருமேனியும் நந்திதேவரும் அருள்பாலிக்கின்றனர் .
தொடர்புக்கு -திரு.மணிகண்டன் -8015543257